/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் திருடிய 4 பேர் கைது மூன்று வாகனங்கள் பறிமுதல்
/
மணல் திருடிய 4 பேர் கைது மூன்று வாகனங்கள் பறிமுதல்
மணல் திருடிய 4 பேர் கைது மூன்று வாகனங்கள் பறிமுதல்
மணல் திருடிய 4 பேர் கைது மூன்று வாகனங்கள் பறிமுதல்
ADDED : டிச 27, 2025 05:26 AM
திருவாடானை: திருவாடானை அருகே காவணக்கோட்டை கண்மாய்க்கரை அருகில் மணல் திருடுவதாக தகவல் கிடைத்தது.
திருவாடானை இன்ஸ்பெக்டர் சதிஷ்பிரபு மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட னர்.
அப்போது மணல் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் மணல் திருடுவது தெரிந்தது. போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
கீழ்பனையூர் வைரவமூர்த்தி 28, அரியான்கோட்டை அகிலன் 21, நத்தக்கோட்டை ராமமூர்த்தி 38, கூடலுார் சிலம்பரசன் 37, ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திருவாடானை அருகே கட்டவிளாகம் ஆற்று பகுதியில் மணல் திருடுவதாக தகவல் கிடைத்தது.
கட்டவிளாகம் மற்றும் கடம்பூர் கிராம உதவியாளர்கள் சுரேஷ், சிவசங்கரன் ஆகியோர் சென்று சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
புகாரின் பேரில் திருவாடானை போலீசார் பூலாங்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை தேடி வரு கின்றனர்.

