ADDED : டிச 27, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாணடில் புதிதாக புறக்காவல் நிலையத்தை மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார். பஸ் ஸ்டாண்ட் வளாகம்,அதை சுற்றியுள்ள இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை கருதியும், குற்றங்களை தடுக்கும் வகையில் புதிதாக 39 சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புறக்காவல் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேமராபதிவுகளை போலீசார் கணக்காணிக்கின்றனர். நகராட்சி தலைவர் கார்மேகம், போலீசார் பங்கேற்றனர்.

