/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தோண்டப்பட்ட சாலை; சீரமைக்கப்படுமா
/
தோண்டப்பட்ட சாலை; சீரமைக்கப்படுமா
ADDED : டிச 27, 2025 05:27 AM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்ஜீவன் திட்ட பைப் லைன் பதிப்பதற்கு ரோடுகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் பைப் லைன் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், சேதப்படுத்தப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாததால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளும் வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
குறிப்பாக பனைக்குளம் பஸ் ஸ்டாப்பில் இருந்து சோகையன் தோப்பு செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரோடுகளும் சீரமைக்கப்படாத நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சாலைகளை சீரமைக்க வேண்டி பனைக்குளம் முஸ்லிம் பரிபால சபை தலைவர் அப்துல் வகாப் கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

