/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணி முடித்த 4 பேருக்கு பாராட்டு
/
100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணி முடித்த 4 பேருக்கு பாராட்டு
100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணி முடித்த 4 பேருக்கு பாராட்டு
100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணி முடித்த 4 பேருக்கு பாராட்டு
ADDED : டிச 06, 2025 05:44 AM

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 100 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., பணியை முடித்த ஒரு மேற்பார்வை யாளர், 3 பி.எல்.ஓ.,க் களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருவாடானை தாலுகா வில் வாக்காளர் தீவிர திருத்தம் பணிக்காக வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண், புகைப் படம் ஒட்டப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாக்காளர் களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வந்தனர். அதன்படி இத்தாலுகாவில் 13 மேற்பார்வையாளர்கள், 135 பி.எல்.ஓ.க்கள் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 100 சதவீதம் பணியை முடித்த தொண்டி பிர்கா தேர்தல் மேற் பார்வையாளர் மேகமலை, சின்னத்தொண்டி ஓட்டுச்சாவடி அலுவலர் சுசி, ஆதியூர் ஓட்டுச்சாவடி அலுவலர் ரேகா மற்றும் முத்து ஆகிய 4 பேருக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தாசில்தார் ஆண்டி கூறுகையில், ஒரு மாதத்திற்குள் பணியை முடிக்க உத்தரவிடப் பட்டது. அதன்படி அனைத்து பணிகளையும் ஏறக்குறைய முடித்துவிட்டோம். டிச.,11க்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். 100 சதவீதம் பணியை முடித்த 4 பேருக்கும் அலுவலர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது என்றார்.

