/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகையை மக்கள் பெறலாம்
/
வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகையை மக்கள் பெறலாம்
வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகையை மக்கள் பெறலாம்
வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகையை மக்கள் பெறலாம்
ADDED : டிச 06, 2025 05:38 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 851 கணக்குகளில் ரூ.51 கோடியே 42 லட்சம் உரிமை கோரப் படாமல் உள்ளது. வங்கி கணக்குக்கு உரியவர்கள், அவர்களது வாரிசுதாரர் விண்ணப்பித்து வைப்புத் தொகையை திரும்பப் பெறலாம்.
இதன்படி மாவட்டத்தில் தற்போது வரை 260 வங்கி கணக்குகளில் ரூ.60 லட்சத்து 92 ஆயிரம் 288 உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் www.udgam.rbi.org.in என்ற இணைய தளத்தில் வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களில் தங்களது உரிமை கோரப்படாத வைப்புத்தொகை இருப்பின் அதை கே.ஒய்.சி. ஆவணங்களுடன் சமர்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் முகாம் வங்கிகளில் வரும் டிச.,31 வரை நடை பெறும். எனவே வங்கிகள் மற்றும் நிதி சார் நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வைப்புத்தொகையாளர்கள் அல்லது இறந்த வைப்புத் தொகையாளர் களின் பரிந்துரைக்கப் பட்டவர்களின் சரியான ஆதாரங்களை சமர்பித்து உரிமை கோரப்படாத தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் 10 பேருக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 562 உரிமை கோரப் படாத வைப்புத் தொகையினை வாரிசுதாரர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து வங்கி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

