/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
/
பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
ADDED : டிச 06, 2025 05:38 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
டிச.,6ஐ முன்னிட்டு நாடு முழுவதும் பொது இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். அதன்படி நேற்று பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து வெடிகுண்டு சோதனை நடத்தி துப்பாக்கி ஏந்திய போலீசார் இரு நுழைவு பகுதி களிலும் இரவு, பகலாக கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளனர்.
பாலத்தில் அந்நியர்கள் ஊடுருவி செல்பி எடுக்கவோ, துாண்டிலில் மீன்பிடிக்கவோ கூடாது என ரயில்வே போலீசார் எச் சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் திருக்கோயில், ரயில்வே ஸ்டேஷன், பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.