/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபம் அரசு விடுதியில் மழைநீர்: மாணவர்கள் அவதி
/
மண்டபம் அரசு விடுதியில் மழைநீர்: மாணவர்கள் அவதி
ADDED : டிச 06, 2025 05:39 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் அரசு மாணவர் விடுதி முன்பு மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதிப் படுகின்றனர்.
நவ.,29, 30ல் மண் டபத்தில் பெய்த கனமழையால் மண்டபம் கேம்ப், எருமைதரவை, மைக்குண்டு ஆகிய பகுதியில் மழைநீர் தேங்கியதால் ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
இந்நிலையில் மண் டபம் முகாமில் உள்ள அரசு மாணவர் விடுதியில் ஏராளமான மாண வர்கள் தங்கி படிக்கின்றனர். இந்த விடுதி முன்பும், பக்கவாட்டிலும் மழைநீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது. மழை நின்று 6 நாட்கள் ஆகியும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அப்படியே உள்ளது.
இதனால் இரவில் மாணவர்கள் கொசுத் தொல்லையில் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிக்கு சென்று வரும் போது தேங்கிய மழை நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே மாணவர்கள் நலன் கருதி மழைநீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

