/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

ADDED : ஏப் 30, 2025 06:14 AM
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
ராமேஸ்வரம் துறைமுகம் வீதி கடற்கரையில் இருந்து வேனில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை சிலர் கடத்திச் செல்வதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ராமேஸ்வரம் ரயில்வே பீடர் ரோடு அருகில் அவ்வழியாக சென்ற வேனை சோதனையிட்டனர். அதில் 19 சாக்கு மூடையில் உயிருடன் கடல் அட்டைகள் இருந்தன.
அவற்றை கடத்திச் சென்ற ராமேஸ்வரம் எம்.ஆர்.டி., நகர், நேதாஜி நகரைச் சேர்ந்த அம்பு ராஜன் 29, வில்வ புவனேஸ்வரன் 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கடல் அட்டைகளை மறைவான இடத்தில் காய வைத்து கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்திச் செல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம்.
பறிமுதல் செய்த வேன், கடல் அட்டைகள் மற்றும் கைதான இருவரும் மண்டபம் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருவர் மீதும் வனத்துறையினர் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.