/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ்சில் முண்டியடித்து இடம் பிடித்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்
/
பஸ்சில் முண்டியடித்து இடம் பிடித்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்
பஸ்சில் முண்டியடித்து இடம் பிடித்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்
பஸ்சில் முண்டியடித்து இடம் பிடித்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்
ADDED : ஜன 14, 2024 04:08 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பஸ்சில் கூட்டமாக இருந்ததால் முண்டியடித்து இடம் பிடித்தபெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.
ராமநாதபுரம் அருகே ஆணைகுடியை சேர்ந்த செல்வமணி மனைவி பூசவல்லி 50. இவரது பேத்திக்கு ஜாதகம் எழுதுவதற்காக மகள், பேத்தியுடன் நேற்று ராமநாதபுரம் வந்தார்.
வழிவிடு முருகன் கோயில் பகுதியில் ஜாதகம் எழுத கொடுத்துவிட்டு திரும்பி ஊருக்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறியுள்ளார்.
கூட்டத்தில்முண்டியடித்து பஸ்சில் இடம் பிடித்த பூசவல்லி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை காணாததால் அதிர்ச்சியடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி இவரது செயினை பறித்துச் சென்றனர். பூசவல்லி புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-----