/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆன்லைனில் வேலை தருவதாக மோசடி ஒரே மாதத்தில் 50 பேர் புகார்
/
ஆன்லைனில் வேலை தருவதாக மோசடி ஒரே மாதத்தில் 50 பேர் புகார்
ஆன்லைனில் வேலை தருவதாக மோசடி ஒரே மாதத்தில் 50 பேர் புகார்
ஆன்லைனில் வேலை தருவதாக மோசடி ஒரே மாதத்தில் 50 பேர் புகார்
ADDED : பிப் 18, 2025 06:38 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இல்லத்தரசிகளை குறிவைத்து வேலை தருவதாக கூறி ஒரே மாதத்தில் 50க்கு மேலானோரிடம் ரூ.50 லட்சத்திற்கும் மேல் மோசடி நடந்துள்ளது.
வலைதளங்களில் நேரத்தை செலவிடும் இல்லத்தரசிகளை குறிவைத்து அவர்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளில் புகும் மர்ம நபர்கள், வீட்டிலிருந்தபடியே வேலை, குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை பதிவிடுகின்றனர்.
இதை நம்பும் இல்லத்தரசிகள், இளம்பெண்கள் அவர்கள் கூறும் டாஸ்க்களை செய்து குறைந்த அளவு தொகையை முதலீடு செய்கின்றனர். அதற்கு பரிசு தொகை வழங்கி அவர்களின் ஆசையை துாண்டுகின்றனர்.
இதன் மூலம் நம்பகத்தன்மை அதிகரிக்க பெண்கள் கூடுதல் தொகையை நபர்கள் கூறும் வங்கி கணக்குகளில் முதலீடு செய்கின்றனர்.
உடனே அந்த கும்பல் பணத்தை அபேஸ் செய்து விட்டு தலைமறைவாகின்றன.
ஏமாற்றப்பட்டவர்களில் சிலர் போலீசில் புகாரளிக்கின்றனர். மற்றவர்கள் வெளியில் தெரிந்தால் பிரச்னை எனக்கூறி மவுனமாக கடந்து செல்கின்றனர்.
இதுபோன்ற புகார்களில் 2025 ஜனவரியில் மட்டும் 50 பெண்கள் 50 லட்சத்திற்கும் மேல் பணத்தை ஆன்லைனில் இழந்ததாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தனர்.
போலீசார் ஒருசிலரது வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை எடுக்க முடியாமல் தடுத்துள்ளனர்.