தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/6 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

6 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

6 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்


UPDATED : நவ 30, 2026 12:00 AM

ADDED : நவ 29, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:00 AM ADDED : நவ 29, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: சென்னை --– ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்த முயன்ற 6 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு புறப்பட்ட ராமேஸ்வரம் விரைவு ரயிலில் காரைக்குடி வட்ட ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ராமநாதபுரம்– - ராமேஸ்வரம் இடையே ரயில் சென்ற போது கடைசியில் இருந்த முன்பதிவில்லா பெட்டியை சோதனை செய்தனர்.

தனியாக இருந்த பையில் 6 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் அதனை கொண்டு வந்தவரை ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us