அரையாண்டு தேர்வு கால அட்டவணையில் மாற்றம்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்
அரையாண்டு தேர்வு கால அட்டவணையில் மாற்றம்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 11:14 PM
ராமநாதபுரம்: அரையாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில செய்தி பிரிவு செயலாளர் நல்லதம்பி கூறியதாவது:
டிச.,14 முதல் 22 வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அனைத்து பாடங்களுக்கும் திருப்புதல் செய்ய இடைவெளி விட்டு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமூக அறிவியல் பாடத்திற்கு மட்டும் திருப்புதல் செய்ய இடைவெளி விடவில்லை.
எனவே டிச.,22க்கு பதிலாக சமூக அறிவியல் தேர்வை கடைசி வேலை நாளான டிச.,23க்கு தள்ளி வைக்க வேண்டும்.
கடந்த காலாண்டு தேர்வின் முழுதும் இதே போல் சமூக அறிவியல் பாடத்திற்கு திருப்புதல் செய்ய நாட்கள் கொடுக்கப்படாததால் அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்கள் சிரமப்பட்டனர் என்றார்.
