/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'ஸ்பீக்கர் பாக்ஸ்' விழுந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
/
'ஸ்பீக்கர் பாக்ஸ்' விழுந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
'ஸ்பீக்கர் பாக்ஸ்' விழுந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
'ஸ்பீக்கர் பாக்ஸ்' விழுந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
ADDED : ஆக 09, 2025 09:21 PM

ராமநாதபுரம்:கோவில் திருவிழாவிற்காக கட்டப்பட்ட ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கோரைக்குளத்தை சேர்ந்தவர் விஜயகாந்த். இவருக்கு, 6 வயதில் சுகமதி என்ற மகள் இருந்தார்.
கோரைக்குளம் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியில் ஸ்பீக்கர் செட் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் அருகே, சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத வகையில், ஸ்பீக்கர் பாக்ஸ் சரிந்து அவர் மீது விழுந்தது.
அலறித்துடித்த சிறுமியை அங்கிருந்தவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.