/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
65,000 விவசாயிகள் மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெறவில்லை! பொதுசேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு

ADDED : ஜூன் 26, 2025 10:53 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனித்துவமான அடையாள எண் பெறவில்லை. கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாம், பொதுசேவை மையங்களில் ஜூலை 5க்குள் இலவசமாக பதிவு செய்ய வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையானது வேளாண் அடுக்ககம் மூலம் நில உடமைகளை உள்ளடக்கிய விவசாயிகளின் தரவுகளை சேகரிக்கப்பதற்கு பிரத்யேகமான விவசாயிகள் பதிவேடு எனும் செயலியை உருவாக்கியுள்ளது.
இச்செயலி மூலம் விவசாயிகளின் நில உடமைகளை சார்பார்த்து ஆதார் எண்ணைப் போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் வட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் பிப்., முதல் நடக்கிறது.
இருப்பினும் மாவட்டத்தில் 87 ஆயிரத்து 218 விவசாயிகள் மட்டும் அடையாள எண் பெற்றுள்ளனர். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தனித்துவமான அடையாள எண் பெறவில்லை. தற்போது அடையாள எண் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் பி.எம்.கிசான் அடுத்த தவணைத்தொகை விடுவிக்கப்படும் என மத்தியரசு தெரிவித்துள்ளது.
எனவே விடுபட்டுள்ள விவசாயிகள் அனைத்து பொதுசேவை மையங்களில் தங்கள் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஒரு கிராமத்தில் மட்டும் பதிவு செய்திருப்பின் மற்ற கிராமங்களிலும் உள்ள நில விபரங்களை ஏற்கனவே பதிவு செய்து பெறப்பட்ட அடையாள எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ் கூறுகையில், அனைத்து விவசாயிகளும் தங்களுடைய கணினி பட்டா, ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட அலைபேசி தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ அல்லது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் நடத்தப்படும் முகாம்களில் ஜூலை 5 க்குள் இலவசமாக பதிவு செய்யலாம் என்றார்.