/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில்வே சுரங்க பாதையில் 7 அடிக்கு மழை நீர்; 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

ADDED : அக் 20, 2025 12:18 AM

ராமநாதபுரம்: இரு நாட்களாக தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் 7 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி இருப்பதால் 5 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே சுரங்க பாதையை தாண்டித்தான் லாந்தை, கண்ணனை, சின்ன தாமரைக்குடி, பெரிய தாமரைக்குடி, லாந்தை காலனி ஆகிய கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். ஆனால் குடிநீர் லாரி , காஸ் லாரி, ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்ற வாகனங்கள் கிராமங்களுக்கும் செல்ல முடியவில்லை. ரயில்வே நிர்வாகம் சார்பில் அந்த தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணி நடக்கிறது. இருந்தபோதிலும் மழை நீர் அதிகமாக தேங்கி இருப்பதால் வெளியேற்றும் பணி போதுமானதாக இல்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
கடந்தாண்டு இதுபோன்று ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தங்கியபோது லாந்தை கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது ராமநாதபுரம் வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக பார்வையிட்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அப் பணிகள் முடிவடைய மேலும் ஓர் ஆண்டுக்கு மேல் ஆகும் என்பதால் இந்த ஆண்டும் ஐந்து கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.