/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்தது
/
ராமேஸ்வரத்தில் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்தது
ADDED : அக் 20, 2025 01:01 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வடகிழக்கு பருவமழை துவங்கியதால் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் கனமழை பெய்தது. நேற்று காலை 7:00 மணி வரை ராமேஸ்வரத்தில் 4.2 செ.மீ., பாம்பன் 3.7 செ.மீ., தங்கச்சிமடம் 5.8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அலுவலகம் முன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கெந்தமாதன பர்வதம் தெருவில் உள்ள கருப்பையா என்பவரது ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து வெளிப்பகுதியில் விழுந்தது. அப்போது துாக்கத்தில் இருந்தவர்கள் அலறடித்து எழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வருவாய்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.