/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
750 கிலோ ரேஷன் பருப்பு பறிமுதல் இருவர் கைது
/
750 கிலோ ரேஷன் பருப்பு பறிமுதல் இருவர் கைது
ADDED : பிப் 01, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுாரில் சரக்கு வாகனத்தில் ரேஷன் பருப்பு கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., மோகன் தலைமையில் ஏட்டுகள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி, தேவேந்திரன் ஆகியோர் பார்த்தி பனுார் நான்கு ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர்.
சரக்கு வாகனம் ஒன்றில் 25 மூடைகளில் 750 கிலோ ரேஷன் துவரம் பருப்பு இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், விருதுநகர் மாவட்டம் யானைகுழாய் பகுதியை சேர்ந்த செபாஸ்டின், 56, மைக்கேல்ராஜ், 29, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.