/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
79 கி.மீ., சைக்கிளில் சென்று கூலி தொழிலாளி விழிப்புணர்வு
/
79 கி.மீ., சைக்கிளில் சென்று கூலி தொழிலாளி விழிப்புணர்வு
79 கி.மீ., சைக்கிளில் சென்று கூலி தொழிலாளி விழிப்புணர்வு
79 கி.மீ., சைக்கிளில் சென்று கூலி தொழிலாளி விழிப்புணர்வு
ADDED : ஆக 15, 2025 11:24 PM

கமுதி: கமுதி அருகே காட்டு எமனேஸ்வரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாண்டி 65, சுதந்திர தினத்தை முன்னிட்டு 79 கி.மீ., தேசிய கொடியுடன் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இவர் அன்றாட கூலி வேலை செய்து வருகிறார். நேற்று 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கூலி வேலைக்கு செல்வதை தவிர்த்து தேசப்பற்று உணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் கூலி வேலைக்கு செல்ல பயன்படுத்தும் சைக்கிளில் தேசிய கொடியுடன் பார்த்திபனுார், கமுதி, அபிராமம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 79 கி.மீ., பயணம் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வங்காருபுரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளை பாதுகாத்திடும் வகையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், காட்டுப்பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். சைக்கிளில் பயணம் செய்த போது பொதுமக்கள் பாண்டியை பாராட்டினர்.