/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபத்தில் இருந்து கள்ளத்தனமாக படகில் இலங்கை சென்ற அகதிகள் 9 பேர் கைது

ADDED : நவ 11, 2024 12:09 AM

ராமேஸ்வரம் ; ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து கள்ளத்தனமாக படகில் இலங்கை சென்ற 9 அகதிகளை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 2022-- 23ல் திரிகோணமலை, மன்னாரைச் சேர்ந்த நிரோஜன், மனைவி சுதா, விதுஸ்திகா 13, அஜய் 12, அபிநயா 2, மற்றும் ஞானஜோதி 46, ஜித்து 12, மகேந்திரன் 50, பூலேந்திரன் 54, ஆகியோர் அங்கிருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி வந்திறங்கி, மண்டபம் அகதிகள் முகாமில் தங்கினர்.
இங்கு இவர்களுக்கு போதுமான வருவாய் இன்றி கூலி வேலைக்கு சென்று தவித்த நிலையில் புதிய அதிபராக அனுரகுமார திசநாயகே பதவி ஏற்றதும் பொருளாதாரம் மீட்சி அடையும் என கருதி, மீண்டும் இலங்கை செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக நாகையில் பைபர் கிளாஸ் படகை ரூ.5 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி, மண்டபம் கரைக்கு கொண்டு வந்தனர். பின் அகதிகள் 9 பேரும் நேற்று முன்தினம் இரவு கள்ளத்தனமாக இப்படகில் புறப்பட்டு இலங்கை சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே ரோந்து சுற்றிய இலங்கை கடற்படை வீரர்கள் அகதிகளின் படகை மடக்கி பிடித்து அவர்களை கைது செய்து அந்நாட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களிடம் விசாரணை நடக்கிறது.