ADDED : ஜன 22, 2025 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடானை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் தொண்டி வெள்ளைமணல் தெருவில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஆய்வு நடத்தினர்.
இத்தெருவில் ரேஷன் கடை அருகே மளிகை கடை நடத்தும் பீர்முகமது 66, வீட்டில் 35 சாக்கு மூடைகளில் 500 கிலோ ரேஷன் அரிசியும், அதே தெருவைச் சேர்ந்த ரசீனா 60, வீட்டில் 10 பிளாஸ்டிக் டிரம்களில் 400 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பிறகு ரேஷன் அரிசி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீதும் விசாரணை நடக்கிறது.