ADDED : செப் 23, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி வேளாண் அலுவலகத்தில் கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் தேசிய கால்நடை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை அலுவலர் உலகுசுந்தரம் தலைமை வகித்தார். பரமக்குடி உதவி வேளாண் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க நிர்வாகி மலைச்சாமி ஒருங்கிணைத்தார்.
அரியனேந்தல் கால்நடை மருத்துவர் டாக்டர் ரவிக்குமார் விவசாயிகளிடம் பேசினார்.
தேசிய கால்நடை இயக்கம் என்பது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
மத்திய அரசின் இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்போர் மற்றும் அவர்களின் சமூக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமாக கொண்டுள்ளது.
வெங்காளூர் ஊராட்சி தலைவர் மலைச்சாமி, காவனுார் சண்முகராணி, அக்கிரமேசி கோபால் பங்கேற்றனர்.