/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயன்பாடில்லாமல் காட்சி பொருளான சமுதாய கிணறு
/
பயன்பாடில்லாமல் காட்சி பொருளான சமுதாய கிணறு
ADDED : ஆக 31, 2025 11:31 PM

திருவாடானை: திருவெற்றியூரில் பயன்பாடில்லாமல் சமுதாயக் கிணறு காட்சி பொருளாகியுள்ளது.
திருவாடானை தாலுகாவில் குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே கிராமங்களில் சமுதாய கிணறுகள் அமைக்கப்பட்டது. அதில் பெரும்பாலான கிணறுகள் பயன்பாடில்லாமல் உள்ளது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி குடிநீர் தேவைக்காக புதுப்பையூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கிணறு அமைக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிணறு அருகே இருந்த மின் மோட்டார்கள் திருடு போனது.
அதன் பிறகு புதிய மோட்டார் அமைக்காததால் குடிநீர் சப்ளை இல்லாமல் போனது. இதனால் கிணறு துார்ந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வறட்சியான காலத்திலும் இந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருக்கும்.
பல ஆண்டுகளாக இக்கிணற்றில் இருந்து நீர் எடுக்காமல் போனதால் துார்ந்து விட்டது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கிணற்றை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது. கிணற்றின் உள்ளே குப்பை நிறைந்து காணப்படுகிறது.
அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சமுதாய கிணறுகளை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

