/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குப்பையோடு குப்பையாக மாறிய குப்பை குழி அமைத்தல் திட்டம்
/
குப்பையோடு குப்பையாக மாறிய குப்பை குழி அமைத்தல் திட்டம்
குப்பையோடு குப்பையாக மாறிய குப்பை குழி அமைத்தல் திட்டம்
குப்பையோடு குப்பையாக மாறிய குப்பை குழி அமைத்தல் திட்டம்
ADDED : ஜூலை 13, 2025 11:01 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் குப்பை குழி அமைத்தல் திட்டம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சுவர்கள் சேதமடைந்து குப்பை கொட்டும் இடத்தில் குப்பையோடு குப்பையாக மாறி உள்ளது.
முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் ஊராட்சி சார்பில் பல்வேறு கிராமங்களில் அந்தந்த கிராமங்களை பொறுத்து நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதத்திற்கு முன்பு புதிதாக இரண்டு அடிக்கு சுவர்கள் அமைத்து குப்பை குழி அமைத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தற்போது முதுகுளத்துார் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் குப்பை குழி சுவர்கள் சேதமடைந்து வீணாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் திட்டத்தால் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தில் குப்பை கொட்டும் இடத்தில் குப்பையோடு குப்பையாக மாறி உள்ளது. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்து குப்பை குழி அமைத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து முறையாக பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.