/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் அழகி போட்டிக்கு முதுகுளத்துார் பெண் தேர்வு
/
மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் அழகி போட்டிக்கு முதுகுளத்துார் பெண் தேர்வு
மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் அழகி போட்டிக்கு முதுகுளத்துார் பெண் தேர்வு
மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் அழகி போட்டிக்கு முதுகுளத்துார் பெண் தேர்வு
ADDED : அக் 26, 2025 02:10 AM

முதுகுளத்துார்: தாய்லாந்தில் நடைபெறும் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பி.டெக்., பட்டதாரி பெண் ஜோதிமலர் 28, தேர்வாகி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தெற்குகாக்கூரை சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு, - அல்லிராணி மகள் ஜோதிமலர். பி.டெக்., முடித்து ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
சில மாதங்களுக்கு முன் புனேயில் நடந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 40க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் தேசிய அளவிலான 'மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025' பட்டத்தை ஜோதிமலர் வென்றார். இதையடுத்து நவ.,8 ல் தாய்லாந்தில் நடைபெற உள்ள 'மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025' அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வதற்காக ஜோதிமலர் தேர்வாகி உள்ளார். போட்டியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து ஜோதிமலர் கூறியதாவது:
மிஸ் ெஹரிடேஜ் போட்டியில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். சர்வதேச மேடையில் இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதில் பெருமை அடைகிறேன்.
இந்த போட்டி நாடுகளுக்கு இடையே அமைதி சுற்றுலா கலாசார பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும் பங்கேற்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளவும், கொண்டாடவும் உதவும் என்றார்.

