/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் கடலில் சூறாவளி துார்வாரும் கப்பல் காத்திருப்பு
/
பாம்பன் கடலில் சூறாவளி துார்வாரும் கப்பல் காத்திருப்பு
பாம்பன் கடலில் சூறாவளி துார்வாரும் கப்பல் காத்திருப்பு
பாம்பன் கடலில் சூறாவளி துார்வாரும் கப்பல் காத்திருப்பு
ADDED : ஜன 13, 2024 01:16 AM

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் சூறாவளி வீசுவதால் ரயில் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் துார்வாரும் கப்பல் பாம்பன் கரையில் காத்திருக்கிறது.
துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து புறப்பட்ட சிறிய ரக துார்வாரும் கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் செல்ல நேற்று முன்தினம் பாம்பன் கடற்கரைக்கு வந்தது. பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல கப்பல் கேப்டன் துறைமுக அலுவலரிடம் விண்ணப்பித்தார்.
இந்நிலையில் பாம்பனில் சூறாவளி வீசுவதால் கடலில் அதிக நீரோட்டமும், கொந்தளிப்பும் உள்ளது. இதனால் ஓரிரு நாட்களுக்கு பிறகே ரயில் பாலம் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து பாம்பன் தென் கடற்கரையில் கப்பலை நிறுத்தி வைத்து ரயில் பாலம் திறப்பிற்காக கப்பலில் கேப்டன், மாலுமிகள் காத்திருக்கின்றனர்.