/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் ரூ.75 லட்சத்தில் வனத்திற்குள் 125 ஏக்கரில் புதிய சூழலியல் சுற்றுலா மையம் டிரக்கிங் வசதியும் அமைகிறது

ADDED : ஏப் 30, 2025 07:14 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் ராமேஸ்வரத்தில் உள்ள அடர்ந்த கல்லங்காடு காட்டுப்பகுதியில் டிரக்கிங் செல்லும் வகையில் ரூ.75 லட்சத்தில் 125 ஏக்கரில் சூழலியல் சுற்றுலா மையம் (எக்கோ டூரிசம்) அமைக்க பாறைகளை அகற்றி மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது.
தமிழகத்தில் சிறந்த சுற்றலா மையங்களில் முக்கியமானதாக ராமேஸ்வரம் தீவு திகழ்கிறது. இங்குள்ள ராமநாதசுவாமி கோயில், ராமர்பாதம், தனுஷ்கோடி, குருசடைத் தீவு உள்ளிட்ட இடங்களுக்கு ஆண்டிற்கு 3 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ராமேஸ்வரத்தில் சுற்றுலா தலங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ராமர்பாதம் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லங்காடு காட்டுப்பகுதியில் 125 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த வனப்பகுதி நிலத்தை சீரமைத்து மரக்கன்றுகள் நடவு செய்து அவ்வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் டிரக்கிங் செல்லும் வகையில் சூழலியல் சுற்றுலா மையம் அமைக்கப்பட உள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2024ல் சென்னை அதிகாரிகள் கல்லங்காட்டில் டிரக்கிங் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். தற்போது ரூ.75 லட்சத்தில் சூழலியல் சுற்றுலா மையம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது. 2026ல் கல்லங்காட்டுக்குள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சூழலியல் மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. என்னென்ன அம்சங்கள் அமையும் என்பது குறித்து பிறகு விரிவாக தெரிவிக்கப்படும் என்றனர்.