/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புது ரேஷன் கடையை கட்டியாச்சு.. மின் இணைப்பு மட்டும் வாங்கல... கீழப்பெருங்கரையில் தடுமாற்றம்

ADDED : ஜூன் 30, 2025 04:29 AM

பரமக்குடி : பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தில் ரேஷன் கடை புதிதாக கட்டப்பட்ட நிலையில் மின் வசதியின்றி எதிர் வீட்டில் பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது.
பரமக்குடி ஒன்றியம் பெருங்கரை ஊராட்சியில் கீழப்பெருங்கரை கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டை தாரர்களுக்கு 2023 --24ம் நிதி ஆண்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
பரமக்குடி எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா காணப்பட்டது. இதனால் மக்கள் பொருட்களை வாங்க வசதியாக இருக்கும் என எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் கடை திறக்கப்பட்டும் மின்சார வசதி செய்யப்படவில்லை. இதனால் ஊழியர்கள் பொருட்களை புதிய கடையில் அடுக்கி வைப்பதோடு சரி. தற்போது எடை மெஷின் துவங்கி, ரேகை வைப்பது என அனைத்திற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது.
தொடர்ந்து மின் வசதி செய்யப்படாத சூழலில் புதிய ரேஷன் கடைக்கு எதிரில் உள்ள வீட்டில் எடை மெஷின் மற்றும் ரேகை வைப்பது என தெருவை நாடும் சூழல் உள்ளது.
இதனால் கிராம மக்கள் பொருட்களை நிம்மதியாக வாங்க முடியாமல் உள்ளதுடன் ஊழியர்களும் தடுமாறுகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் ரேஷன் கடை இல்லையே என்ற ஏக்கம் உள்ள சூழலில், கடை இருந்தும் பயன்பாட்டிற்கு வராதது குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இங்கு ஒப்பந்ததாரர் உடனடியாக மின் வசதி செய்து ரேஷன் கடை முழுமையாக இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.