ADDED : மார் 11, 2024 11:07 PM

அ நிறம் | அளவு
திருவாடானை, - திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட பயணியர் விடுதி உள்ளது. இங்கு தங்குவோர் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு அரசுப் பயணியர் விடுதிகள் ஆய்வு மாளிகை என பெயர் மாற்றப்பட்டது. இக்கட்டடத்தை சுற்றி ஒரு பக்கத்தில் மட்டும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் தென்பகுதியில் சுற்றுச் சுவர் இல்லை. இதனால் இரவில் கால்நடைகள் கூடாரமாக மாறியுள்ளது. கட்டடத்தை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது. விடுதியில் தங்குபவர்கள் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்டி, சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
