/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
/
ராமநாதபுரத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
ராமநாதபுரத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
ராமநாதபுரத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
ADDED : மார் 14, 2024 03:25 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மார்ச் 15ல்) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, புகைப்படத்துடன் மார்ச் 15 காலை 10.00 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வர வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.
ஆட்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள், வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.