/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்க கடலில் தொடர் புயல் சின்னம்; மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
/
வங்க கடலில் தொடர் புயல் சின்னம்; மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
வங்க கடலில் தொடர் புயல் சின்னம்; மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
வங்க கடலில் தொடர் புயல் சின்னம்; மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
ADDED : டிச 18, 2024 07:02 AM
ராமநாதபுரம் : தமிழகத்தில் வங்க கடலில் தொடர் புயல் சின்னம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன் பிடி குறைவு காலத்தில் வழங்கப்படும் தொகையை அதிகரித்து வழங்க மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தொண்டி, தேவிபட்டினம், மூக்கையூர், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். 2400 விசைப்படகுகள், 20 ஆயிரம் நாட்டுப்படகுகளை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் உள்ளது.
நவ., டிச., மாதங்களில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அதிகபட்சமாக 7 முதல் 10 நாட்கள் மட்டுமே மீன் பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். 50 நாட்கள் மீன்பிடி தடையால் தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இது போன்ற காலங்களில் அரசு மீன் பிடி குறைவு காலத்திற்கு ரூ.6000 மட்டுமே நிவாரணம் வழங்குகிறது.
இது மீனவர்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் நாள் ஒன்றுக்கு ரூ.350 கணக்கிட்டு வழங்கப்படுகிறது. அதே போல் மீன் பிடி குறைவு காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.350 என்றாலும் மாதத்திற்கு ரூ.10,500 வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100 டன்கள் வரை மீன் பிடிக்கின்றனர். ரூ.10 கோடி வரை மீன் வர்த்தகம் நடக்கிறது. நவ., டிச., மாதங்களில் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். மீன் பிடிக்க செல்லும் மீனவர் ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ரூ.1000 வருமானம் ஈட்டுகிறார்.
தடை காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நவ., டிச., மாதங்களில் மீன் பிடி குறைவு காலத் தொகையாக வழங்கப்படும் ரூ.6000த்தை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மீன் பிடி தடைக்காலத்தில் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனர்.