ADDED : ஜூன் 18, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானை தாலுகா அளவிலான இந்த ஆட்டுச்சந்தை பெரிய சந்தையாகும். சாதாரண நாட்களில் 500 முதல் 600 வரையும், தீபாவளி, பொங்கல், உள்ளூர் திருவிழாக்களின் போது 1000த்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் வந்து செல்கின்றனர். ஆட்டுச்சந்தை திறந்த வெளியில் இருப்பதால் மழைக் காலங்களில் ஆடுகள், வியாபாரிகள் பாதிப்படைகின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது: திருவாடானை ஆட்டுச்சந்தையில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. திறந்த வெளியில் இருப்பதால் மழைக்காலங்களில் ஆடுகள், வியாபாரிகள் பாதிப்படைகின்றனர். வாரச் சந்தையில் ஆட்டுச் சந்தை நடக்கும் இடத்தில் நிரந்தர கூடாரம் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முன் வர வேண்டும் என்றனர்.