/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏனாதி கிராமத்தில் பாரம்பரியமாக நடக்கும் ஒரு ஊர் கபடி போட்டி
/
ஏனாதி கிராமத்தில் பாரம்பரியமாக நடக்கும் ஒரு ஊர் கபடி போட்டி
ஏனாதி கிராமத்தில் பாரம்பரியமாக நடக்கும் ஒரு ஊர் கபடி போட்டி
ஏனாதி கிராமத்தில் பாரம்பரியமாக நடக்கும் ஒரு ஊர் கபடி போட்டி
ADDED : ஜன 14, 2025 08:11 PM
முதுகுளத்துார்:
முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏனாதி மக்கள் மட்டும் விளையாடும் கபடி போட்டி நடந்தது.
முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் ராணுவம், போலீஸ், அரசுத்துறை, வெளிநாடுகள், பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கிராமத்தின் பாரம்பரியமாக தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு ஏனாதியை சேர்ந்த கிராம மக்கள் மட்டும் ஆண்கள், பெண்கள் என வயதின் அடிப்படையில் தனித்தனியாக அணிகள் பிரிக்கப்பட்டு காலையிலிருந்து இரவு வரை கபடி போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டியில் மற்ற கிராமத்தினருக்கு அனுமதி கிடையாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் விழாவை முன்னிட்டு ஒரு ஊர் கபடி நடத்தப்படுகிறது. கிராம மக்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாதி கிராமம் கபடிக்கு பெயர் பெற்ற கிராமம். இங்கு கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறுவர் முதல் பெரியவர் வரை கபடி விளையாடி வருகின்றனர். தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெறும் கபடி போட்டியில் விளையாடுவதற்காக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வேலை செய்யும் கிராம மக்கள் விடுமுறைக்கு ஊர் திரும்பி விடுவார்கள்.
அனைத்து ஊருக்கும் முன் உதாரணமாக ஒற்றுமையாக கபடி விளையாடி வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்படும். தொடர்ந்து சிறுவர்களுக்கு கபடி விளையாட்டில் ஊக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று தலைமுறைகளாக வெற்றி பெற்ற கோப்பைகள் சமுதாய கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வெளி கிராம மக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். அதுவே கிராமத்திற்கு தனி சிறப்பு என்றனர்.