/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போக்குவரத்துக்கு இடையூறாக கிளைகளை பரப்பும் மரம்
/
போக்குவரத்துக்கு இடையூறாக கிளைகளை பரப்பும் மரம்
ADDED : ஜூன் 21, 2025 11:21 PM

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே பனைக்குளம் பஸ் ஸ்டாப் அருகே நாட்டு கருவேல மரம் உள்ளது.
15 ஆண்டு வயதுள்ள இம்மரம் தனது கிளைகளை ரோட்டின் மையப்பகுதியில் 7 அடி உயரத்திற்கும் மேல் பரப்பி உள்ளதால் அவ்வழியாக அரசு டவுன் பஸ்கள் கனரக வாகனங்கள் செல்லும் போதுது மரத்தின் கிளைகளில் மோதி கண்ணாடிகள் தொடர்ந்து சேதமடைகின்றன.
நல்லிருக்கையை சேர்ந்த விவசாயி முத்துக்குமார் கூறுகையில், நாள்தோறும் உத்தரகோசமங்கை மற்றும் சாயல்குடி, கன்னியாகுமரி செல்லக்கூடிய பஸ்கள், கனரக வாகனங்கள் இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்துகின்றன.
எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தின் கிளைகளை அகற்றினால் உத்தரகோசமங்கை ராமநாதபுரம் செல்லக்கூடிய வாகனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.