/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் பயனற்ற பழுதடைந்த பரிசோதனை இயந்திரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் பயனற்ற பழுதடைந்த பரிசோதனை இயந்திரம்
ராமேஸ்வரம் கோயிலில் பயனற்ற பழுதடைந்த பரிசோதனை இயந்திரம்
ராமேஸ்வரம் கோயிலில் பயனற்ற பழுதடைந்த பரிசோதனை இயந்திரம்
ADDED : பிப் 01, 2024 06:53 AM

ராமேஸ்வரம், : -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களின் பைகளை பரிசோதனை செய்யும் இயந்திரம் பழுதாகி முடங்கியது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர்.
இக்கோயில், பக்தர்களுக்கு பயங்கரவாதிகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் 2013 முதல் கோயில் நான்கு வாசலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களை வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்திய பின்பு கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர்.
பக்தர்கள் பெரும்பாலும் கோயில் கிழக்கு வாசல் வழியாக உள்ளே செல்வதால் இங்கு பக்தர்கள் கொண்டு வரும் பைகளில் வெடிகுண்டு, ஆயுதங்கள் உள்ளதா எனபதை கண்டறிய பரிசோதனை இயந்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வைத்தனர்.
துவக்கத்தில் இந்த இயந்திரத்தில் பைகளை பரிசோதனை செய்த நிலையில் காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டதால் இயந்திரமும் பழுதாகி முடங்கி கிடக்கிறது.
விபரீதம்
இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் பைகளை கொண்டு செல்வது சர்வ சாதாரணமாகி விட்டது.
இச்சூழலில் பயங்கரவாதிகள் கோயிலுக்குள் விபரீதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் பயன்பாடின்றி கிடக்கும் பரிசோதனை இயந்திரத்தை சரி செய்து பக்தர்களின் உடைமைகளை ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.