/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனை மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி
/
பனை மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி
ADDED : டிச 12, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சண்முகவேல்பட்டினம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் மீனவர் ரவிக்குமார் 30.
இவர் நேற்று முன்தினம் மாலை கட்டையன் பேரன் வளைவு கிராமத்தில் இருந்து சண்முகவேல்பட்டினம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரோட்டோர பனை மரத்தில் எதிர்பாராத விதமாக டூவீலர் மோதிய விபத்தில் தலையில் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.

