/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.ஐ., தேர்விற்கு நாளை மாதிரி தேர்வு
/
எஸ்.ஐ., தேர்விற்கு நாளை மாதிரி தேர்வு
ADDED : டிச 12, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஐ., போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்து தயாராகி வரும் இளைஞர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இரண்டு முழு மாதிரி தேர்வு நாளை (டிச.,13) மற்றும் டிச.,17 ஆகிய நாட்களில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துள்ள நுழைவுச்சீட்டு நகலுடன் நேரில் வரலாம்.
விபரங்களுக்கு 04567----230 160 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துள்ளார்.

