sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பள்ளி, கல்லுாரிகளில் 'ரோபோ' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் இனி வருங்காலங்களில் எல்லாமே ரோபோ தான் என்கிறார்

/

பள்ளி, கல்லுாரிகளில் 'ரோபோ' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் இனி வருங்காலங்களில் எல்லாமே ரோபோ தான் என்கிறார்

பள்ளி, கல்லுாரிகளில் 'ரோபோ' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் இனி வருங்காலங்களில் எல்லாமே ரோபோ தான் என்கிறார்

பள்ளி, கல்லுாரிகளில் 'ரோபோ' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் இனி வருங்காலங்களில் எல்லாமே ரோபோ தான் என்கிறார்


ADDED : அக் 23, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரோபோடிக் போட்டிகள் நடந்தது.

இந்த ரோபோடிக் போட்டிக்கான பயிற்சியாளர் ராமநாதபுரம் பட்டணம்காத்தானை சேர்ந்த காட் பிரெயின் 28, என்ற இளைஞர். எதிர் காலத்தில் ரோபோக்கள் பல புதிய வேலைகளைச் செய்யும் உதாரணமாக வயதானவர்களை கவனித்துக் கொள்வது, விண்வெளியில் ஆய்வு செய்வது, ஆபத்தான வேலைகளை செய்வது உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள விஷயங்களை ரோபோக்கள் இனிவரும் காலங்களில் செய்யக்கூடிய நிலை உள்ளது.

ரோபோடிக்ஸ் என்பது ரோபோக்களை பற்றி ஆய்வு செய்யும் மற்றும் உருவாக்கம் செய்யும் துறை.இயந்திரவியல், மின்னணுவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றின் கலவையாகும். ரோபோட்டிக் ரோபோக்களின் வடிவமைப்பு கட்டுமானம், செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ரோபோடிக் பயிற்சியாளர் காட் பிரெயின் கூறியதாவது:

நான் கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் பி.டெக்., படிப்பை 2018ம் ஆண்டு முடித்தேன். கல்லுாரி நாட்களில் இருந்தே இயந்திரங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் மனித வாழ்க்கையை எளிதாக்கும் தொழில் நுட்பங்களில் எனக்கு ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வமே என்னை ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு துறைக்கு அழைத்துச் சென்றது.

கடந்த 3 ஆண்டுகளாக நான் தொடர்ந்து ரோபோடிக்ஸ் துறையில் பணியாற்றி வருகிறேன். கல்வி மற்றும் தொழில் துறை அளவிலான பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளேன்.

கோடோ ரோபோ என்ற ரோபோடிக்ஸ் நிறுவனத்தை நடத்தி இதன் மூலம் பள்ளி, கல்லுாரிகளில் ரோபோ குறித்த விழிப்புணர்வு கண்காட்சிகள், தேர்வுகளை நடத்தி வருகிறேன்.

சில முக்கிய திட்டங்களான வானிலை கண்காணிப்பிற்கான க்யூப் செயற்கைக்கோள், ஜி.பி.எஸ் மற்றும் ஜி.எஸ்.எம்., அலர்ட் கொண்ட வாகனம் மது கண்டறிதல் அமைப்பு, விபத்து கண்டறிதல், ரோபோ தானியங்கி கழிவுநீர் சுத்திகரிப்பு, தானியங்கி பாசன ரோபோ மற்றும் வீட்டு ஆட்டோமேஷன் அமைப்புகள் மூலமாக தரையை சுத்தம் செய்யக்கூடிய ரோபோ உள்ளிட்ட மனிதனின் அன்றாட அத்தியாவசிய தேவைகளில் ரோபோவை புகுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனிதனைப் போலவே நடமாடும் தன்மை கொண்ட ரோபோவை வடிவமைத்து அவற்றை பட்டாசுகள் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் நடமாட விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக வணிகம் மற்றும் கல்வி நோக்கத்திற்கான ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ரோபோ மூலமாக ஏ.ஐ., ட்ரோன் தொழில் நுட்பம் மற்றும் 3டி பிரின்டிங் போன்ற நவீன விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். மனித நல் சிந்தனைக்கு ஏற்ப ரோபோக்களை வடிவமைப்பு வருவது ஆரோக்கியமான விஷயம் என்றார்.






      Dinamalar
      Follow us