/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
10 ஆயிரம் ஏக்கரில் சத்திரக்குடியில் நெல் சாகுபடி
/
10 ஆயிரம் ஏக்கரில் சத்திரக்குடியில் நெல் சாகுபடி
ADDED : அக் 23, 2025 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -பரமக்குடி அருகே சத்திரக்குடி பகுதியில் பத்தாயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பரமக்குடி அருகே சத்திரக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகள் உழுது விதைப்பு செய்து வைத்துள்ளனர். தற்போது பெய்து வரும் கன மழையால் வயல்களில் நீர் நிரம்பியுள்ளது.

