/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் நாளை ஆதார் சிறப்பு முகாம்
/
பரமக்குடியில் நாளை ஆதார் சிறப்பு முகாம்
ADDED : பிப் 10, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகில் இயங்கி வரும் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை குறித்த சிறப்பு முகாம் நடக்கிறது.
இதன்படி நாளை (பிப்.11) காலை 8:30 முதல் மாலை 6:00 மணி வரை அனைத்து பொதுமக்களும் பயன்பெறலாம். இதில் புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், பிறந்த தேதி, அலைபேசி எண், முகவரி திருத்தம் செய்து கொள்ள முடியும். மேலும் 5 மற்றும் 10 ஆண்டிற்கு மேல் உள்ள ஆதாரை புதுப்பித்து கொள்ளலாம்.
பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கு குறிப்பிட்ட வயதினருக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.50 மற்றும் 100 என கட்டணம் செலுத்தும் வகையிலும் இருக்கும், என தலைமை அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.