/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடி அமாவாசை: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏற்பாடுகள்
/
ஆடி அமாவாசை: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏற்பாடுகள்
ஆடி அமாவாசை: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏற்பாடுகள்
ஆடி அமாவாசை: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏற்பாடுகள்
ADDED : ஜூலை 22, 2025 11:57 PM
தேவிபட்டினம்; நாளை ஆடி அமாவாசையில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக தேவிபட்டினம் நவபாஷாணத்தில் தடுப்பு கம்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்தில் ஆடி, தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடுவதற்கு ஆண்டு தோறும் பல ஆயிரம் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், நாளை ஆடி அமாவாசையில் நவபாஷாண கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக பக்தர்கள் அதிகம் வருவார்கள்.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, பக்தர்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனி வழிகள் உருவாக்கப்பட்டு தடுப்பு கம்புகள் மூலம் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் வருகைக்கு ஏற்றவாறு பல்வேறு சிறப்பு வசதிகளையும் நவபாஷாணத்தை நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.