தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆவின் பால் தட்டுப்பாடு

ஆவின் பால் தட்டுப்பாடு

ஆவின் பால் தட்டுப்பாடு


ADDED : செப் 17, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை பகுதியில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் பால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிகமாக வாங்குகின்றனர். கடந்த சில நாட்களாக அன்றாட தேவைக்கான 10 ரூபாய் பாக்கெட் மற்றும் அரை லிட்டர் பால் பாக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காலையில் கடைக்கு செல்லும் மக்கள் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பால் பாக்கெட் மிகக் குறைந்த அளவு விநியோகிக்கப்படுவதால் முகவர்கள் மற்றும் கடைக்காரர்கள் பால் விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அத்தியாவசிய தேவையான பால் விநியோகத்தை உடனடியாக சீரமைக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us