/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில சிலம்ப போட்டிக்கு அபிராமம் மாணவர் தேர்வு
/
மாநில சிலம்ப போட்டிக்கு அபிராமம் மாணவர் தேர்வு
ADDED : நவ 20, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி அருகே பாப்பனம் பிளஸ் 1 மாணவர் முனீஸ்வர பாண்டியன் மாநில சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கமுதி அருகே பாப்பனம் பகுதியை சேர்ந்த முனியசாமி - சிவசக்தி மகன் முனீஸ்வர பாண்டியன் 15, அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.
சிலம்ப போட்டியில் மாவட்ட அளவில் முத லிடம் பெற்று மாநில சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றி பெற்ற முனீஸ்வர பாண்டியனை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.

