ADDED : நவ 20, 2025 05:32 AM

புதிய தார்சாலை வேண்டும்
பெருங்குளம்- இருட்டூரணி கிராமங்களின் இணைப்பு சாலை கல் சாலையாக உள்ளது. கற்களால் வாகனங்களின் டயர் சேதமடைவதால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் வர மறுக்கின்றனர். அப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும்.
-ஏ.முருகேசன், இருட்டூரணி.
பகலில் எரியும் தெருவிளக்கு
பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி கார்டன் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பகலில் தொடர்ந்து எரிகிறது. இதனால் விரைவில் பழுதாக வாய்ப்பு உள்ளது. தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ். சங்கர், பட்டணம்காத்தான்.
குழாய்களால் இடையூறு
ராமநாதபுரம் அரண்மனைக்கு செல்லும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறாக 4 மாதங்களாக குழாய்கள் உள்ளன. அவற்றை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ஆர்.பன்னீர்செல்வம், ராமநாதபுரம்.
குண்டும் குழியுமான ரோடு
மண்டபம் பேரூராட்சி ஜமீன் சத்திரம் தெருவில் ரோடு சேதமடைந்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ராமநாதன், மண்டபம்.
மண்சாலையில் அவதி
பேராவூர் ஊராட்சி காட்டூரணி வடக்கு தெருவில் மண் சாலையாக உள்ளதால் மழை நேரத்தில் மக்கள் சிரமப்படுகின்றனர். தெரு விளக்குகள் இல்லாததால் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
-எஸ்.செல்வம், காட்டூரணி, ராமநாதபுரம்.

