
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம் : திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரத்தில் உள்ள தண்ணீர் செல்லும் துாம்பு வாய்க்கால்களை சீரமைக்கும் விதமாக ரோட்டாரத்தில் ஆங்காங்கே பெரிய வகை சிமென்ட் துாம்புகள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த துாம்புகள் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டை ஒட்டியவாறு இறக்கி வைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள துாம்புகள் தெரியாமல் எதிர்வரும் வாகனங்களுக்கு வழி விடும் நோக்கில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்புறப்படுத்த வேண்டும்.

