/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அத்தானுார் ரோட்டில் விபத்து அபாயம்
/
அத்தானுார் ரோட்டில் விபத்து அபாயம்
ADDED : அக் 19, 2025 09:28 PM

ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலை அத்தானுார் விலக்கில் இருந்து அத்தானுார், துத்தியேந்தல், காவனுார் வழியாக கிழக்கு கடற்கரை சாலை செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள கிராமத்தினரும், விவசாயிகளும் பயனடைகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டின் இரு புறமும் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்களில் சிக்குகின்றனர். டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சீமைக்கருவேல மரம் முட்களால் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டோர சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.