UPDATED : அக் 30, 2026 05:12 PM
ADDED : அக் 30, 2026 05:07 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் கூட்டுறவுத்துறையில் பணிகள் முடங்கியது. மாவட்ட தலைவர் விஜய் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் கூட்டறிக்கையில் கூறியிருப்பது:
பதிவாளர் அலுவலகத்தில் பார்வையாளர் நேரம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு கொள்கைகளுக்கு முரணாக செயல்படும் பதிவாளரை மாற்ற வேண்டும். ஊழியர் லோகநாயகியின் பணி விடுப்பு ஆணையை ரத்து செய்து மீளப்பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடக்கிறது.
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர். ––
