/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
/
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
ADDED : மார் 07, 2024 05:07 AM
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் குழந்தைகளை கடத்துவதாக தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவுகிறது. நேற்று முன்தினம் திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் பள்ளிக்கு சென்ற ஐந்து வயது சிறுமியை சிலர் கடத்திச் சென்றதாக செய்தி பரவியது.
இதைப் பார்த்தவர்கள் அத்தகவலை மேலும் பல குரூப்களுக்கு அனுப்பினர். இதனால் மக்கள் பதட்டமடைந்தனர். சிறிது நேரத்தில் அச்செய்தி தவறான தகவல் என மீண்டும் பரவியது. இதுகுறித்து திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி கூறியதாவது:
சமீப நாட்களாக குழந்தை கடத்தல் நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுவதால் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை சிலர் பரப்புகின்றனர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவ்வாறு பதிவு செய்வோர் மீது சைபர் கிரைம் போலீசார் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகள் கடத்தல் என பரப்பப்படும் அந்த வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம். பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள போலீஸ்ஸ்டேஷனில் உடனே தொடர்பு கொள்ளலாம் என்றார்.

