/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் காவிரி நீரை மோட்டார் வைத்து உறிஞ்சும் போக்கு அதிகரிப்பு நடவடிக்கை தேவை

ADDED : நவ 01, 2024 04:51 AM
கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் காவிரி குடிநீரை வீடுகளில் மோட்டார் வைத்து உறிஞ்சுவது அதிகரித்துள்ளது.
நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. 62 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு வீடுகளுக்கென காவிரி குடிநீர் என தனி பைப்லைன் உள்ளது. வீடுகளுக்கு தங்கு தடையின்றி காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் மின் மோட்டார் மூலம் காவிரி குடிநீரை சட்ட விரோதமாக உறிஞ்சும் போக்கு அதிகரித்துள்ளது.
இதனால் மேடான பகுதிகளில் காவிரி நீர் வரத்து குறைவாகவும், தண்ணீர் வராத நிலை உள்ளதால் பிரதான பைப் லைனிலிருந்து வீடுகளுக்கு செல்லும் குழாய்களில் அதிக திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தி உறிஞ்சி டேங்குகளில் ஏற்றுகின்றனர்.
இதனால் பிற பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். முறையாக தண்ணீர் வரி செலுத்தியும் தண்ணீர் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் சட்ட விரோதமாக மின் மோட்டார் வைத்து உறிஞ்சும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.