/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை தேவை: ; இருபுறங்களிலும் நிழல்தரும் மரங்கள் நட வலியுறுத்தல்

ADDED : நவ 24, 2025 05:42 AM

சாயல்குடி: ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி கீழக்கரை, சிக்கல், வழியாக சாயல்குடி வரை 67 கி.மீ.,ல் கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது. இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வைக்காமல் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளதால் அகற்றி நிழல் தரும் மரங்களை நட வேண்டும்.
கடந்த 2007ல் துவங்கி 2010ல் கிழக்கு கடற்கரை சாலையில் இரு வழித்தட சாலைகளுக்காக கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டதாகும். இங்கு ஏராளமான சிறு மற்றும் பெரிய பாலங்களும் அமைந்துள்ளது. சாலையில் இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வைக்காமல் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக சாயல்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இச்சாலையின் வழித்தடத்தில் நிழல் தரும் மரங்களை உரிய முறையில் நட்டு வைப்பதற்கு வழி காண வேண்டும். முன்பு சாலையோர மரம் என்ற திட்டத்தில் வளர்க்கப்பட்ட மரங்களை விஷமிகள் வெட்டி அழித்துள்ளனர். ஒரு சில மரங்கள் மட்டுமே பெயரளவில் மிஞ்சியுள்ளன.
எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் வழியாக செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். சாலைப் பணியாளர்கள் முறையாக சீமைக் கருவேல மரங்களை அகற்றி சாலை பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.
இரவு நேரங்களில் சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
---