/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பஸ் ஜப்தியால் பயணிகள் அவதி இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
/
அரசு பஸ் ஜப்தியால் பயணிகள் அவதி இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
அரசு பஸ் ஜப்தியால் பயணிகள் அவதி இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
அரசு பஸ் ஜப்தியால் பயணிகள் அவதி இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
ADDED : டிச 19, 2025 05:14 AM
பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் ரூ.21 லட்சம் இழப்பீடு வழங்காத நிலையில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டதால் மதுரை, சேலம் செல்ல இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.
பரமக்குடியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன். 2022ம் ஆண்டு மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்றார்.
அப்போது பரமக்குடியில் இருந்து கம்பம் சென்ற அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். மகன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2025 ஜன., ல் நீதிமன்றம் 17 லட்சத்து 98 ஆயிரத்து 516 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
மேலும் தாமதமான நிலையில் நவம்பரில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 536 ரூபாய் வட்டி மற்றும் செலவுத் தொகை சேர்த்து 21 லட்சத்து ஆயிரத்து 477 ரூபாய் வழங்க வேண்டும்.
செலுத்தாத நிலையில் அதற்குரிய தொகைக்காக அரசு பஸ் ஜப்தி செய்யலாம் என நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் வந்த மதுரை கோட்டத்தைச் சேர்ந்த சேலம் பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் நிறுத்தினர். பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதனால் மதுரை மற்றும் சேலம் செல்ல இருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பல்வேறு நாட்களில் பஸ்கள் ஜப்தி செய்யப்படுவதால் பயணிகள் அவதி அடைகின்றனர்.

